கோட்டா – மைத்திரி கொலை சதி வழக்கில் இருந்து நாலக சில்வா விடுதலை!

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 2019ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் இருந்து நாலக சில்வாவை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நாலக சில்வாவுக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என சட்டமா அதிபர் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத புலனாய்வு இயக்குனரகத்தின் பொறுப்பாளராக கடமையாற்றிய அவர் 17.10.2018 அன்று தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.
அவர் சமர்ப்பித்த மேல்முறையீட்டை பரிசீலித்து 01.03.2023 அன்று பாதி சம்பளத்தில் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்.