புத்தளம் நாவற்காடு பகுதி கொள்ளையர்களை தெரியுமா?

புத்தளம் நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவக்காடு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த இருவர், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி ஒரு கோடியே ஐம்பத்திரண்டு இலட்சத்து முப்பத்தி இரண்டாயிரம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையிட்டுள்ளனர்.
முறைப்பாட்டாளர்கள் வழங்கிய தகவல் மற்றும் வடிவத்தின் படி, குற்றப் பிரிவின் ஓவியர் சந்தேக நபர்கள் இருவரையும் வரைந்துள்ளார்.
இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், புத்தளம் பிரிவு, (071 – 8591289), உதவி பொலிஸ் அத்தியட்சகர் – கல்பிட்டி (071 – 8591301) நிலையம், நுரைச்சோலை, (071 – 8592126) என்ற தொலைபேசிக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.