பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்துக்கு தடை.
பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்துக்கு தடை.
நாவலப்பிட்டியிலிருந்து கெட்டபுலா சந்தியின் ஊடாக கொத்மலை செல்லும் பிரதான வீதியில் திஸ்பனை பகுதியில் இன்று அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைபட்டது.
இதனையடுத்து அப்பிரதேச வாசிகள் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.
குறித்த மரம் முறிந்து வீழ்ந்ததால் சுமார் மூன்று மணித்தியாலயத்திற்கு மேல், போக்குவரத்து தடைபட்டிருந்தது. இதனால் கொத்மலை, பூண்டுலோயா, திஸ்பனை ஆகிய பகுதிகளுக்கு சென்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
அத்தோடு மின் இணைப்புகள் மீது முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்பை வழங்கும் கம்பம் மீது விழுந்துள்ளது. இதனால் மின் கம்பிகள் எல்லாம் அறுந்து வீதியில் விழுந்துள்ளன. ஏனைய சில மின்கம்பங்களும் சேதம் ஏற்பட்டுள்ளன.