சர்வதேச மனக் கணிதப் போட்டியில் யாழ். மாணவன் ருஷாந் முதலிடம்!

மலேசியாவில் நடைபெற்ற 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவரர்கள் பங்குபற்றிய சர்வதேச மனக் கணிதப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம், பிறவுண் வீதியில் இயங்கும் UCMAS கிளையில் பயிலும் இவர், இலங்கை சார்பில் கலந்துகொண்டு Champion பட்டத்தை பெற்ற ஒரே ஒருவர் என்பது பாராட்டுக்குரியது.
2023ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் சர்வதேச மனக் கணிதப் போட்டி இடம்பெற்றது. இந்தப் போட்டியில் உலகளாவிய ரீதியிலே 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேந்த 2 ஆயிரத்து 500 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 62 மாணவர்கள் இதில் பங்குபற்றினர். இதில் கிருபாகரன் தர்சானந், செந்தில்நாதன் சேசாளன், கஜேந்திரன் லவின், வானதி சிவநேசன் ஆகியோர் தத்தமது பிரிவுகளில் சர்வதேச ரீதியாக மூன்றாம் இடங்களைத் தமதாக்கிக் கொண்டனர்.