முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர், 07 தடவைகள் தடுக்க முயற்சி செய்தும் ஈஸ்டர் தாக்குதல் நடந்தது.(வீடியோ)
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தன ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்க 07 தடவைகள் முயற்சித்தார்… பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தல்.
தாக்குதல் நடப்பதற்கு முன்னர், தாக்குதல் தொடர்பான அனைத்துத் தகவல்களும் பூஜித், சிசிர மெண்டிஸ், ஹேமசிறி, ரவி சேனவிரத்ன ஆகியோருக்கு 07 தடவைகள் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டது!
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவி செனவிதரத்ன, பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி ஆகியோருக்கு அறிவித்துள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் தெரியவந்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பொது பாதுகாப்பு அமைச்சரிடம் , ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹெக்டர் அப்புஹாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சார்பில் , சபையின் சபாநாயகர் சுசில் பிரேமஜயந்த பதில் பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, பின்வரும் அதிகாரிகளுக்கு புலனாய்வுத் தகவல்களை அனுப்பிவைத்துள்ளதுடன், அது பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
புதிய இணைப்பு :
2019 ஏப்பரல் 21 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் எந்த நேரத்திலும் தாக்குதலை நடத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதே மாதம் 16 ஆம் திகதி தாலங்குடாவில் சோதனை நடத்தப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
பொது பாதுகாப்பு அமைச்சில் இருந்து அமைச்சர் டிரான் அலஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் , புத்தளம் மாவட்ட சபை உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஏப்ரல் 16ஆம் திகதி தாலங்குடா மோட்டார் சைக்கிள் வெடித்த சம்பவம், சம்பந்தப்பட்டவர்களால் மேற்கொள்ளப்பட்ட வெடிமருந்து சோதனை என முன்னாள் பணிப்பாளர் ஏப்ரல் 18ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மோட்டார் சைக்கிள் வெடிப்பு தொடர்பான மேலதிக அறிக்கை மற்றும் சஹாரானின் வலையமைப்புடன் தொடர்பில் உள்ள வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி இரு அதிகாரிகளுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி, முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மெண்டிஸுக்கு வெளிநாட்டு புலனாய்வு நிறுவனம் வழங்கிய புலனாய்வுத் தகவல்களைத் தெரிவித்து, அது தொடர்பான ஆலோசனைகளைக் கோரி கடிதம் அனுப்பியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனமொன்றில் இருந்து கிடைத்த தகவலை ஆராய்ந்த பின்னர், முன்னாள் பணிப்பாளர் ஏப்ரல் 9 ஆம் திகதி கடிதம் மூலம் தாக்குதல் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.