வெங்காயத்தை ஏற்றுமதி செய்யத் தடை – மத்திய அரசு அதிரடி
வெளிநாடுகளுக்கு வரும் மார்ச் மாதம் வரை வெங்காயம் ஏற்றுமதி செய்யத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென அதிகரித்தது. தமிழகத்தை பொறுத்தவரை புயல் மற்றும் கனமழை காரணமாக வரத்தும் கணிசமான அளவுக்கு குறைந்தது. அதனால், சென்னை கோயம்பேடு சந்தையில், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 110 ரூபாயும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்தது.
இந்நிலையில், வருகிற மார்ச் மாதம் வரை வெளிநாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்யத் தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தடை அறிவிப்புக்கு முன்பாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பயணத்தில் உள்ள சரக்குகளுக்கு இத்தடை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, வெளிநாடுகளிலிருந்து வெங்காய தேவைக்கான கோரிக்கை வரும் பட்சத்தில், மத்திய அரசு அனுமதி அளித்தால் ஏற்றுமதி செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.