மலையகத்தின் மூத்த ஊடகவியளாலர் காலமானார்.
மலையகத்தின் மூத்த ஊடகவியலாளர் மஸ்கெலிய துரைசாமி காலமானார்.
மலையகத்தின் மூத்த ஊடகவியலாளரும் ஒய்வுபெற்ற பாடசாலை அதிபருமான சோழமுத்து துரைசாமி சுகவீனம் காரணமாக இன்று (20.09.220) டிக்கோயா வைத்தியசாலையில் காலமானார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் இறக்கும்போது வயது 88.
சோழமுத்து துரைசாமி ஒரு ஆசிரியராக கடமையாற்றியபோது லேக் ஹவுஸ் நிறுவனத்தின் மஸ்கெலியா பிராந்திய ஊடகவியலாளராக கடந்த 50 வருடங்களாக தனது ஊடக சேவையை முன்னெடுத்து வந்தவர்.
இவர் தினகரன் டெய்லி நிவுஸ் ஆகிய பத்திரிக்கைகளுக்கு பிராந்திய ஊடகவியலாளராக தனது சேவையை முன்னெடுத்து வந்தவர்.
இவர் ஒரு சமூக சேவையாளராகவும் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஒரு உறுப்பினராகவும் இருந்தவர்.இவருடைய இறுதிக் கிரியைகள் தொடர்பான விடயங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.