தபால் திணைக்களத்திருக்கு இன்று மாலை 04.00 மணி முதல் 48 மணிநேரம் உடல் நலக் குறைவாம்!
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இன்று (10) மாலை 04.00 மணி முதல் 48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
அதன்படி அந்த காலப்பகுதியில் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
தபால் திணைக்களத்தின் 27 பிரதான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த வேலைநிறுத்த காலத்தில் நாட்டில் உள்ள எந்த தபால் அலுவலகமும் அல்லது துணை தபால் அலுவலகமும் எந்த சேவையையும் வழங்காது.
நுவரெலியா மற்றும் கண்டி தபால் திணைக்களத்தின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தல், நிர்வாகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தல், அரச ஊழியர்களால் எதிர்பார்க்கப்படும் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பை ஜனவரி முதல் நடைமுறைப்படுத்துவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.