வடக்கு பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்.
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான குலசிங்கம் திலீபன் தலைமையில் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் இந்திரராசா பிரதாபன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் 2020.09.18 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ k. காதர் மஸ்தான் (மன்னார், முல்லைத்தீவு மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்) மற்றும் நோகராதலிங்கம், பிரதேச சபை தவிசாளர், செயலாளர் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த அபிவிருத்தி கூட்டத்தில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பிரச்சினைகள் மேலும் பல விடயங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டன