மின் துண்டிப்புக்கு மின்னல் தாக்கமே காரணம்! – இலங்கை மின்சார சபை விளக்கம்.

நாடு முழுவதும் நேற்று மாலை திடீரென மின் துண்டிக்கப்பட்டதற்கு, கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்புக்கு மின்னல் தாக்கியமையே காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மின்சக்தி அமைச்சும் இலங்கை மின்சார சபையும் இரு வேறு விசாரணைகளை ஆரம்பித்துள்ளன என்று இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 5.10 மணியளவில் நாடு முழுவதும் திடீரென மின் துண்டிக்கப்பட்டு, பல பிரதேசங்களில் இரவு 10.20 மணியளவிலும், வேறு சில இடங்களில் நேரம் தாமதமாகவும் மீண்டும் மின் விநியோகிக்கப்பட்டு, நிலைமை இயல்புக்குத் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.