அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தீ.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான மெத்சிறி செவன கட்டிட வளாகத்தில் தீ பரவியுள்ளது.
தீயை அணைக்கும் பணியில் அனுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் இரண்டு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கட்டிட வளாகத்தில் இருந்த உள்நோயாளிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.