வடிவேல் சுரேஷுக்கு , ரணில் வழங்கிய இன்னொரு புதிய பதவி.
நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய பதவியொன்றை வழங்கியுள்ளார்.
இதன்படி, பதுளை மாவட்டத்தின் பஸ்சறை மற்றும் லுணுகல பிரதேச செயலகப் பிரிவுகளின் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு அந்த பிரதேச செயலகப் பிரிவுகளில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சகல அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்பார்வையிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்படுவார்.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,ஜனாதிபதியின் ஆலோசகராக வடிவேல் சுரேஷையும் நியமித்திருந்தார்.
மலையக தமிழ் மக்களை இலங்கை சமூகத்துடன் முழுமையாக இணைத்துக்கொள்வது தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷை ஜனாதிபதி நியமித்தார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.