நேருக்கு நேர் மோதும் மெஸ்ஸி – ரொனால்டோ.

அடுத்த ஆண்டு பிரபலக் காற்பந்து வீரர் லயனல் மெஸ்ஸியின் (Lionel Messi) இன்டர் மயாமி (Inter Miami) அணி சவுதி அரேபியாவில் இரு ஆட்டங்களில் கலந்துகொள்ளவிருக்கிறது.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் (Cristiano Ronaldo) அல்-நாசர் அணியுடனும் இன்னொரு சவுதி அணியான அல்-ஹிலாலுடனும் அது பொருதும்.
ரியாத் Season கிண்ணப் போட்டியின் கீழ் அந்த ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
மெஸ்ஸியும் ரொனால்டோவும் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் தேதியன்று திடலில் சந்திப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களுடன் நீடித்த உறவை உருவாக்கிக்கொள்வதற்கான பெரிய வாய்ப்பு அதுவென இன்டர் மயாமி அணியின் தலைமை வர்த்தக அதிகாரி கூறினார்.
மெஸ்ஸியும் ரொனால்டோவும் இதுவரை 30க்கும் அதிகமான முறை எதிரெதிர் அணிகளில் விளையாடி இருக்கின்றனர்.