மருத்துவமனைக்குள் புகுந்த சிறுத்தை: நோயாளிகள் ஓட்டம்! (Video)

மகாராஷ்டிரத்தில் மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்ததால் நோயாளிகள் பதறியடித்து ஓடிய காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நந்தூர்பார் மாவட்டம் ஷஹாதா பகுதியில் ஆதித்யா மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இங்கு பணிபுரியும் தூய்மைப் பணியாளர் செவ்வாய்க்கிழமை காலை சிறுத்தை நடமாட்டத்தை மருத்துவமனை வளாகத்தில் கண்டுள்ளார்.
உடனடியாக ஊழியர்களிடம் இந்த தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, நோயாளிகள், உறவினர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனைவிட்டு வெளியேறி அனைத்து கதவுகளையும் அடைத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர் சிறுத்தையை பத்திரமாக பிடித்து வனப் பகுதிக்குள் விட்டனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், திங்கள்கிழமை இரவு நேரத்தில் மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்து இருக்கக்கூடும் எனத் தெரிவித்தனர்.
மருத்துவமனை வளாகத்துக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.