தனியார் கணக்கில் இருந்து 77 மில்லியன் மோசடி – சம்பத் வங்கியின் 5 உயர் அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை!
வங்கி வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து 77.98 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக கூறப்படும் சம்பத் வங்கியின் தலஹேன கிளையில் கடமையாற்றிய சம்பத் வங்கியின் முன்னாள் உத்தியோகத்தர்கள் ஐவருக்கு வெளிநாடு செல்வதற்கு கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.
விருது பெற்ற பாரம்பரிய வைத்தியர் கலும் ஹர்ஷ கமல் வீரசிங்க (வங்கி கணக்கு வைத்திருப்பவர்) 77.98 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சம்பத் வங்கியின் தலஹேன கிளையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இதற்கு முன்னர் கடுவலை நீதவான் நீதிமன்றில் தடயவியல் கணக்காய்வு அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
லக்னா ஜெயசேகர (முதல் அதிகாரி),
தனுஜா முத்துக்குமாரண (முன்னாள் முகாமையாளர்), அருணா ஜினதாச (முன்னாள் பிராந்திய முகாமையாளர்), கயானி விதானபத்திரன (செயலாளர்) மற்றும்
வங்கி அதிகாரிகளான ஹிரந்த கொடிகார (கிளை கடன் அதிகாரி) வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
முறைப்பாட்டின் சார்பில் சட்டத்தரணி சசிந்த ரொட்ரிகுவுடன் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய ஆஜராகியிருந்தார்.