ராஜசபா மண்டபத்தை புல்டோசர் மூலம் தகர்த்த குருநாகல் நகரசபை தலைவர் உட்பட ஐவருக்கு சிறைத்தண்டனை.

குருநாகல் முன்னாள் நகரசபை தலைவர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட ஐவருக்கு தலா 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் நகரின் மையத்தில் உள்ள இரண்டாம் புவனேகபாகு மன்னரின் அரச மாளிகையின் ஒரு பகுதியை டோசர் செய்து அழித்த குற்றத்திற்காக குருநாகல் மாகாண மேல் நீதிமன்றத்தால் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, அவர்களுக்கு ஒரு கோடியே முப்பத்தாறு இலட்சம் ரூபா நிதி இழப்பீடும், தலா ஐம்பதாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.