கடும் மழை: கலவெவ நீர்த்தேக்க கதவுகள் திறப்பு.

கலவெவ நீர்த்தேக்கத்தின் இரண்டு கதவுகள் நேற்று (15) திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
கலவெவ நீர்த்தேக்கத்தின் இரண்டு கசிவு வாயில்களும் திறக்கப்பட்டுள்ளதால், கலவெவ நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் கொள்ளளவு அதிகரித்துள்ளதால், கீழ்ப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கலவெவ புகையிரதத்தை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு பொறுப்பான பொறியியலாளர் மக்களுக்கு அறிவித்துள்ளார்.