மொட்டு மாநாட்டிற்கு வவுச்சர்கள் தருவதாக சொல்லி ஆட்களை அழைத்து வந்துள்ளார்கள் – புபுது ஜயகொட.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கட்சி மாநாட்டிற்கு தெமட்டகொட, மாளிகாவத்தை, வனாத்தமுல்லை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு வவுச்சர் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி குறிப்பிடுகிறது.
அடுத்த பாடசாலை தவணை ஆரம்பிக்கும் போது மாணவர்கள் புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்காக வவுச்சர் வழங்கப்படும் எனவும் கூட்டத்தின் ஆரம்பம் முதல் முடியும் வரை தங்கியிருப்பவர்களுக்கு மாத்திரமே வவுச்சர் வழங்கப்படும் எனவும் மொட்டு கட்சியினர் கூறி மக்களை அழைத்து வந்துள்ளதாக புபுது ஜயகொட கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.