மதுபான விற்பனை நிலையத்தில் ஆண் ஒருவர் அடித்துப் படுகொலை.

மதுபான விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற தகராறில் ஆண் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கண்டி பிரதேசத்தில் உள்ள மதுபான நிலையத்தில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடுகொஸ்தர – ரணவன பிரதேசத்தை சேர்ந்த நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.