இரத்தக் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு! – பொலிஸார் தீவிர விசாரணை.

இரத்தக் காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் உள்ள வீடொன்றிலேயே பெண்ணின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது என்று கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மித்ரானி பெர்னாண்டோ ஸ்மின் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் அறை ஒன்றில் குப்புற விழுந்து கிடந்ததைக் காண முடிந்தது என்றும், இடுப்புப் பகுதியில் இரத்தக் காயங்கள் காணப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மரணம் கொலையா அல்லது இயற்கையான மரணமான என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. மரணத்துக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றன.
மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.