ஆர்.சம்பந்தனும், மாவை சேனாதிராஜாவும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகின்றனர்
அரசியலில் இருந்து விலக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தன் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி அக்கட்சியின் தலைமைப் பதவிக்கு மூன்று விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ சுமந்திரன் மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் அந்த பதவிக்கு முன்பு வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
எனினும் அதே பதவிக்காக முன்னாள் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அடுத்த மாதம் வவுனியாவில் நடைபெறும் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவும் அரசியலில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.
அதன்படி தமிழரசுக் கட்சிக்கும் புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக அறியவருகிறது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக வருபவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக வருவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.