சஜித் அணியுடன் இணையத் தயார் – பீரிஸ் அதிரடி அறிவிப்பு.

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பரந்துபட்ட எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பவுள்ளேன் என்று டலஸ் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“மிகவும் ஆபத்தான பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக மக்களைப் பாதுகாப்பதே எனது எதிர்பார்ப்பு.
அதற்காக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பரந்துபட்ட எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பத் தீர்மானித்துள்ளேன்.
ஆழமாகச் சிந்தித்தே இந்தத் தீர்மானத்தை நான் எடுத்துள்ளேன்.