உலகிலேயே மிகப்பெரிய வைரச் சந்தையை திறந்துவைத்த பிரதமர் மோடி!
உலகிலேயே மிகப்பெரிய வைரச் சந்தையை குஜராத் மாநிலம் சூரத்தில் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
இந்தியாவில் அதிகளவில் வைர நகைகள் தயாரிக்கும் மையமாக சூரத் திகழ்கிறது. இங்கு சுமார் 36 ஏக்கர் பரப்பளவில் 3 ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட வைர வர்த்தக மையம் கட்டப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, சூரத் டைமண்ட் போர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த வைரச் சந்தையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
அதன்பிறகு அந்த வைர வர்த்தக மையத்தின் மாதிரி தோற்றத்தையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்த வைர வர்த்தக மையத்தில் 175 நாடுகளைச் சேர்ந்த 4,200 வர்த்தகர்கள் தங்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டடமாக சுமார் 80 ஆண்டுகள் இருந்த அமெரிக்காவின் பென்டகன் கட்டடத்தை இந்த வைர அலுவலக கட்டட அலுவலகம் முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.