மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுக்கும் அறிவித்தல்.

தற்போதும் பலத்த மழை பெய்து கொண்டிருப்பதனால் இரணைமடுக்குளத்திற்கான நீர் வருகை அதிகரித்தே காணப்படுகின்றது. எனவே நீர்வரத்தின் அளவைப் பொறுத்து நீர் வெளியேற்றப்பட்டு கொண்டே இருக்கும் சூழல் உருவாகியுள்ளது இதன் காரணமாக தற்போது வெள்ள பாதிப்புக்குள்ளாகி உள்ளான இடங்களில் நீர்மட்டம் அதிகரிக்க கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது.
எனவே இரணைமடு குளத்தின் கீழ் பகுதியில் வாழ்கின்ற மக்கள் வெள்ள அபாயம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்
மாவட்ட அனர்த்த முகாமைத்துவபிரிவு,
மாவட்டச்செயலகம்,
கிளிநொச்சி.