ZEE தமிழ் சரிகமப மகுடம் சூடிய கில்மிஷாவுக்கு ஜனாதிபதி எழுத்து மூலம் வாழ்த்து
தென்னிந்தியாவின் ZEE தமிழ் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சிப் போட்டியில் முதலிடம் பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 18ம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதி தொலைபேசி மூலம் கில்மிஷாவைத் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.
தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசு சார்பான எழுத்து மூலமான வாழ்த்து செய்தியொன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார் ,
அன்புள்ள கில்மிஷா உதயசீலன்,
இந்திய தொலைக்காட்சியான ZEE தமிழ் வழங்கும் ‘சரிகமபா’ Li’l Champs’ Season 03 நடத்திய போட்டியில் முதலிடத்தை பெற்ற உங்கள் சிறப்பான சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்களது அளப்பரிய திறமையும், தளராத அர்ப்பணிப்பும் உங்களுக்கு மட்டுமன்றி, யாழ்ப்பாண நகருக்கும், எமது அன்புக்குரிய தாய்நாடான இலங்கைக்கும் மகத்தான பெருமையை ஏற்படுத்தியுள்ளது. 14 வயதிலேயே, ஆர்வம் மற்றும் விடாமுயற்சியின் நம்பமுடியாத உங்கள் ஆற்றலை உலகிற்கு நிரூபித்துள்ளீர்கள்.
உங்கள் இசைப் பயணம் தொடர்ந்து செழிக்கட்டும், மற்றவர்களும் தங்கள் கனவுகளை போல , அதே ஆர்வத்துடனும் உறுதியுடனும் தொடர உத்வேகமாகச் செயல்படட்டும்.
வாழ்த்துகள்,
ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு