சென்னையில் இருந்து யாழ். வந்த விமானம் தரையிறங்க முடியாது திரும்பியது.
யாழ்ப்பாணத்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக நேற்று (19) சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விமானம் சுமார் நாற்பது நிமிடங்கள் யாழ்ப்பாணத்தின் வான் பரப்பில் பறந்து திரிந்தும் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி பறந்தது.
சென்னையில் இருந்து யாழ்பாணத்தை அடைவதற்கு விமானம் எடுக்கும் அதேயளவு நேரத்தை விமானிகள், யாழ் வானில் பறந்து கொண்டிருக்க வேண்டி வந்தது என யாழ் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்.விமான நிலையத்தைச் சுற்றி இருள் சூழ்ந்துள்ளதாலும் , ஓடுபாதை முற்றாக வெள்ளத்தில் மூழ்கியதாலும் விமான நிலைய ஊழியர்களால் விமானம் தரையிறங்கும் அனுமதி செய்தியை வழங்க முடியவில்
அந்த அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், விமானிகள் சுமார் நாற்பது நிமிடங்கள் விமானத்தை வானில் பறக்கவிட்டும், அது கிடைக்காததால், சென்னையில் இருந்து வந்த 39 பயணிகளுடன் விமானம் மீண்டும் சென்னை திரும்பியது.