வடமராட்சியில் ஹெரோயினுடன் வசமாகச் சிக்கிய 51 வயது பெண்.

யாழ்ப்பாணம், வடமராட்சி – துன்னாலை கிழக்குப் பகுதியில், 51 வயதுடைய பெண் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
தனது ஆடைக்குள் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த நிலையில் நெல்லியடிப் பொலிஸாரால் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.
அந்தப் பெண்ணிடம் இருந்து 6 கிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரைப் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.