இந்தியாவின் புதிய தூதுவர் இலங்கை வருகை!
இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா இன்று (20) கொழும்பை வந்தடைந்தார்.
அவர் ஓரிரு நாள்களுக்குள் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவராகப் பணியாற்றிய கோபால் பாக்லே, ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கைக்கான புதிய தூதுவராக இந்தியாவின் சிரேஷ்ட இராஜதந்திரியான ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெல்ஜியத்துக்கான இந்தியத் தூதுவராகக் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.