இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட 5,000 இற்கும் மேற்பட்ட சிறுமிகள் மீது அவர்களின் இணக்கத்துடனேயே பாலியல் துஷ்பிரயோகம்! – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்.
இலங்கையில் கடந்த நான்கு ஆண்டுகளில் 16 வயதுக்குட்பட்ட 5,000 க்கும் மேற்பட்ட சிறுமிகள் சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்படி, 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் உள்ள 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட 6307 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் பாலித பண்டார சுபசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இதில் 5,055 முறைப்பாடுகளில் சிறுமிகளின் சம்மதத்துடன் பாலியல் துஷ்பிரயோகம் இடம் பெற்றுள்ளமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17 பொலிஸ் பிரிவுகளில் 16 வயதுக்குட்பட்ட 132 சிறுமிகள் கடந்த மூன்று வருடங்களாக வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர்களில் பெரும்பாலானோர் சொந்த விருப்பத்தின் போரில் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும் வைத்தியர் பாலித பண்டார சுபசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் 15 சிறுமிகள் மட்டுமே பலவந்தமாக பலாத்காரம் செய்யப்பட்டனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.