மறைக்கல்வி சார்ந்த பல செயற்பாடுகள் முன்னெடுப்பு.
“மறைதூதுப் பணியான மறைக்கல்வியை நோக்கிப் பயணிப்போம்” எனும் கருப்பொருளில் எழுவைதீவு பங்கில் மறைக்கல்வி வாரம் 13.09.2020 லிருந்து 20.09.2020 வரை சிறப்பாக அனுசரிக்கப்பட்டு மறைக்கல்வி சார்ந்த பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
மறைக்கல்வி மாணவர்களுக்கான சிறப்பு திருப்பலிகள், மறைக்கல்வி வேதாகம போட்டிகள், விளையாட்டுப் போட்டி, பட்டமேற்றல் போட்டி, மாணவர்களுக்கான வினோத உடைப்போட்டி போன்றன இடம்பெற்றன.
இந்நிகழ்வுகள் பங்குத்தந்தை அருட்திரு எரோனியஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் மறையாசிரியர்கள் மற்றும் இளையோரின் உதவியுடன் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.