பொன்முடி இலாகா ராஜகண்ணப்பனிடம்….
அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து அவரிடமிருந்த துறைகள் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் ஒப்படைக்கப்பட்டது. ராஜகண்ணப்பன் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி என்ன?
2006-11 தி.மு.க ஆட்சி காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, 2011 அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி இருவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததோடு, இருவருக்கும் தலா 50 லட்சம் ரூபாய் அபாரதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
இதையடுத்து பொன்முடி வகித்து வந்த தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் துறைகள் அமைச்சர் ராஜகண்ணப்பன்னுக்குக் கூடுதலாக ஒதுக்கி ஆளுநர் மாளிகைக்கு தமிழ்நாடு அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி மற்றும் தேர்வு செய்வதற்கு முன் என்னவெல்லாம் ஆலோசனைகள் செய்யப்பட்டது என்று விசாரித்தோம்.