இங்கிலாந்து தழுவிய சிறுவர்களுக்கான பூப்பந்தாட்ட போட்டி 2023 முடிவுகள்

சிறுவர்களுக்கான இங்கிலாந்து நாடு தழுவிய ரீதியிலான முதல் தரவரிசை பூப்பந்தாட்ட போட்டி கடந்த வாரம் நடைபெற்றிருந்தது.
இந்த போட்டியில் பல தமிழ் இளையோர்களும் கலந்து சிறப்பித்திருந்ததுடன், பலர் வெற்றிகளையும் பெற்று பெருமை சேர்த்திருக்கின்றார்கள்.
உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் போட்டிகளில் கலந்து சிறப்பித்த போட்டியாளர்களும் இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1. ஜோனதன் தெய்வேந்திரன் , 11 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண்கள் : 1ம் இடம் இரட்டையர் பிரிவு
2.ஜோனதன் தெய்வேந்திரன் , 11 வயதுக்குட்பட்ட ஆண்கள் : 3ம் இடம் ஒற்றையர் பிரிவு
3.வர்ஷா ஜெகதரன் , 11 வயதுக்குட்பட்ட பெண்கள் : 3 ம் இடம் ஒற்றையர் பிரிவு
4.சஜன் செந்தூரன் , 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் : 1 ம் இடம் ஒற்றையர் பிரிவு
5. சஜன் செந்தூரன் , 15 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண்கள் : 1 ம் இடம் இரட்டையர் பிரிவு
6. லாவண்யா கிருஷாந்தன் , 15 வயதுக்கு கீழ்ப்பட்டபெண்கள் : 3 ம் இடம் ஒற்றையர் பிரிவு
இப்போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.