யாழ். பல்கலைக்கழகத்தில் ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வு!

ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கான 19ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

பேரலையில் உயிர்நீத்த உறவுகளின் நினைவுருவப் படத்துக்கு அகவணக்கம் செலுத்தி ஈகைச் சுடரேற்றப்ட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன்போது மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையில் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி கோரத்தாண்டவம் ஆடிய சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 19 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன.

 

Leave A Reply

Your email address will not be published.