திருட்டு தெரிந்ததும் , கதிர்காமம் கோவில் வருமானம் பாதியாக குறைந்தது.
ருஹுணு கதிர்காமம் கோவில் வருமானம் சுமார் 50 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவிலில் உள்ள தங்கம் மற்றும் பணத்தை தலைமை கப்புவாவும் (பூசாரி), உதவி கப்புவாவும் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்வது குறித்த செய்தி நாடு முழுவதும் பரவியதும் இந்நிலை உருவானது.
பக்தர்கள் காணிக்கைகளை , மஹரகம புற்று நோய் வைத்தியசாலையின் அபிவிருத்தி நிதிக்கு ஆலயத்தின் பிரதான காரியாலயத்தில் நன்கொடைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்க வட்டு காணாமல் போனமை தொடர்பில், தலைமை கபுவா மற்றும் உதவி கபுவா ஆகியோரை கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்பின் பக்தர்கள் பூசைகளுக்காக ஆயிரக்கணக்காக கொடுத்து வந்த காணிக்கைகளைக் கூட கொடுப்பதை நிறுத்திவிட்டனர்.
கடந்த 11 மாதங்களில் கதிர்காமம் ஆலயத்துக்கு பக்தர்கள் காணிக்கை பெட்டியில் போட்ட சிறு காணிக்கைகள் மூலம் மட்டும் 3450 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை கோயில் கப்புவாக்களுக்கு காணிக்கையாக வழங்கப்படும் பணம் இதை விட நான்கைந்து மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.