சென்னையில் தனியார் தொழிற்சாலையில் ரசாயன கசிவு: 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
சென்னையில் எண்ணூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக மக்கள் மூச்சு திணறல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னையில் எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ரசாயன கசிவு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நள்ளிரவில் கடலுக்கு அடியில் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் ஒன்றின் இரசாயன குழாயில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்டோர் இந்த அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருமல், மூச்சுத்திணறல் என நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட இந்த பாதிப்பால், பெரியகுப்பம் பகுதி மக்கள் உடனடியாக தங்களுடைய இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் கார்கள் மூலமாக அப்பகுதியை விட்டு அவசர அவசரமாக வேறு பகுதிகளுக்கு வெளியேறியுள்ளனர்.