38 பவுண் தங்கத் தட்டு மாயமான விவகாரம்: கதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகர் கைது!
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் முருகன் ஆலயத்துக்குக் காணிக்கையாக வழங்கப்பட்ட 38 பவுண் தங்கத் தட்டு காணாமல்போன விவகாரம் தொடர்பாக அந்த ஆலயத்தின் பிரதான பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆலயத்தின் களஞ்சியத்துக்குப் பொறுப்பாளராகப் பதவி வகித்த சூட்டி என்ற பிரியந்த சட்டத்தரணி ஊடாக கடந்த 19 ஆம் திகதி சரணடைந்ததை அடுத்து, அவர் திஸ்ஸமஹாராம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், பிரதான சந்தேகநபரான கதிர்காமம் முருகன் ஆலயத்தின் பிரதான பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க இன்று கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் சரணடைந்து 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளைக் குற்றத் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.