சுமார் 18 கோடி ரூபா பெறுமதியான 8 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது.

சட்டவிரோதமான முறையில் சுமார் 18 கோடி ரூபா பெறுமதியான 8 கிலோகிராம் தங்கத்தை நாட்டிலிருந்து எடுத்துச் செல்ல முயன்ற நபரை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இலங்கையின் உணவு வழங்கல் பிரிவில் கடமை புரியும் ஊழியரே நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 35 வயதுடையவர் எனவும், அவரிடம் 7 கிலோ 700 கிராம் நிறையுடைய தங்கம் மற்றும் 66 தங்க பிஸ்கட்டுகள் காணப்பட்டன எனவும் இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளருமான சிவலி அருக்கொட தெரிவித்தார்.
சந்தேகநபரிடமிருத்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 17 கோடி 60 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்டது என மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் சுங்கப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
L