கட்சி தாவல்கள் ஆரம்பம் – மைத்திரியின் சகா சஜித்துடன் சங்கமம்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் த சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை இன்று காலை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், கட்சி உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலாங்கொடை தொகுதி பிரதான அமைப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.