டென்மார்க் ராணி கிரீடத்தை துறக்கிறார்
டென்மார்க்கின் ராணி மார்கிரேத் II தனது கிரீடத்தை துறக்க முடிவு செய்துள்ளதாக அவர் புத்தாண்டில் மக்களுக்கு உரையாற்றும் போது தெரிவித்தார்.
52 ஆண்டுகள் நாட்டின் ராணியாக பணியாற்றிய அவர், ஜனவரி 14, 2024 முதல் தனது கிரீடத்தை கைவிடுவதாக கூறினார்.
கிரீடத்தை தனது மகன் இளவரசர் ஃபிரடெரிக்கிற்கு வழங்குவதாகவும் அவர் கூறினார்.
83 வயதான ராணி மார்கிரதா II , 1972 முதல் கிரீடம் தாங்கி வருகிறார். அவர் தற்போது உலகின் ஒரே ராணி மற்றும் ஐரோப்பாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.
பிரிட்டிஷ் அரச பாரம்பரியத்தைப் போலன்றி, 55 வயதான பட்டத்து இளவரசர் ஃபிரடெரிக்கிற்கு அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறாது, மேலும் அவரது அரியணை அன்றைய தினம் கோபன்ஹேகனில் உள்ள அமலியன்போர்க் அரண்மனையில் இருந்து அறிவிக்கப்படும்.