சிதம்பரத்தில் எரிவாயு உருளை வெடித்து வீடு சேதம்!

சிதம்பரம் அருகே சமையல் செய்யும் போது எரிவாயு உருளை வெடித்து வீடு முற்றிலும் சேதம் அடைந்தது.
சிதம்பரம் அருகே பாலூத்தங்கரை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி கதிரவன். இவரது மனைவி தமிழ் இலக்கியா செவ்வாய்க்கிழமை காலை எரிவாயு அடுப்பில் சமைக்கும் பொழுது எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பற்றி உள்ளது. உடனே தமிழ் இலக்கியா அலறி அடித்து வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் எரிவாய் உருளை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறை நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று. தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
இந்த விபத்தில் வீட்டின் உள்ளே இருந்த கட்டில், மெத்தை, பீரோ மற்றும் துணிமணிகள் முற்றிலும் எரிந்து சேதமற்றது. வீட்டின் மேற்கூரையும் சேதமுற்றது. சேதமதிப்பு சுமார் 10,000 இருக்கும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.