பல்கலைக்கழக அனுமதியின் போது சில கற்கைநெறிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள்
எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. (உ/த) பரீட்சைப் பெறுபேற்றின்படி 2023/2024 கல்வியாண்டுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படும்போது பின்வரும் கற்கைநெறிகள் தொடர்பாக சில மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
பல்கலைக்கழக அனுமதிக்கான ஆகக்குறைந்த தேவைப்பாடுகளுக்கு மேலதிகமாக பின்வரும் மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.
1.முகாமத்துவமும் தகவல் தொழில்நுட்பமும் (MIT)
க.பொ.த. (உ/த) தகைமையுடன் மேலதிகமாக க.பொ.த. (சா/த) சாதாரண தரப் பரீட்சையில் கணிதத்தில் B சித்தியும் ஆங்கிலத்தில் C சித்தியும் பெற்றிருக்க வேண்டும். மேலும் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 40 வீதமும் எஞ்சிய மிகுதி பௌதீக விஞ்ஞானப் பிரிவு அல்லது பொதுப் பாடப் பிரிவிலிருந்து உள்ளெடுக்கப்படும்.
2.கணனி விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் (Computer Science & Technology)
AL விவசாய விஞ்ஞானத்தை ஒரு பாடமாகக் கொண்டிருப்போர் இனிமேல் இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க முடியாது.
3.தொழில் முயற்சியும் முகாமைத்துவமும் (Entrepreneurship & Management)
AL வணிகம், உயிரியல், பௌதீகவியல் ஆகிய பிரிவுகளில் தகைமை கொண்டிருப்போர் மாத்திரமே இனிமேல் இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கலாம். கலைப்பிரிவுப் பாடங்களைக் கொண்டிருப்போர் இனிமேல் இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க முடியாது.
4.கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம் (Industrial Information Technology)
AL இணைந்த கணிதம், பௌதீகவியல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் ஒன்றில் குறைந்தது C சித்தி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் OL ஆங்கிலத்திலும் கணிதத்திலும் C சித்தி பெற்றிருக்க வேண்டும்.
5.விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகள் முகாமைத்துவம் (Hospitality, Tourism & Events Management)
AL வணிகம், உயிரியல், பௌதீகவியல் ஆகிய பாடப்பிரிவில் தகைமை பெற்றோர் மாத்திரமே இனிமேல் இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கலாம்.
6.உடற்றொழில் கல்வி (Physical Education)
இக்கற்கைநெறிக்காக நடத்தப்படும் உளச்சார்புப் பரீட்சை இனிமேல் தொடர்புடைய பல்கலைக்கழகங்களால் இணைந்து நடத்தப்படும்.
7.விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும் (Sports Science & Management)
இக்கற்கைநெறிக்காக நடத்தப்படும் உளச்சார்புப் பரீட்சை இனிமேல் தொடர்புடைய பல்கலைக்கழகங்களால் இணைந்து நடத்தப்படும்.
8.பேச்சும் செவிமடுத்தல் விஞ்ஞானமும் (Speech & Hearing Science)
AL உயிரியல், பௌதீகவியல், இரசாயனவியல் ஆகிய பாடங்களில் S சித்தி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் OL ஆங்கிலத்தில் S சித்தி பெற்றிருக்க வேண்டும்.
9.தகவல் தொழில்நுட்பமும் முகாமைத்துவமும் (Information Technology & Management)
AL பொருளியல், புவியியல், அளவையியலும் விஞ்ஞான முறையும் ஆகிய பாடங்களைக் கொண்டிருப்போர் இனிமேல் இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க முடியாது.
10.தகவல் முறைமைகள் (Information Systems)
AL இணைந்த கணிதம், பௌதீகவியல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் ஒன்றில் குறைந்தது C சித்தி பெற்றிருக்க வேண்டும். வேறு ஏதேனும் இரு பாடங்களில் குறைந்தது S சித்தி பெற்றிருக்க வேண்டும்.
11.மொழிபெயர்ப்புக் கற்கைகள் (Translation Studies)
AL சிங்களம் அல்லது தமிழ் ஆகிய பாடங்களில் ஒன்றில் குறைந்தது C சித்தி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் OL சிங்களம் மற்றும் ஆங்கிலம் அல்லது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தது B சித்தி அல்லது AL ஆங்கிலத்தில் குறைந்தது S சித்தி பெற்றிருக்க வேண்டும்.
12.செயற்திட்ட முகாமைத்துவம் (Project Management)
AL கணக்கீடு, வணிகக் கல்வி, வணிகப் புள்ளிவிபரவியல், பொருளியல், புவியியல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், கணிதம் / இணைந்த கணிதம், உயிரியல், விவசாய விஞ்ஞானம், பொறியியல் தொழில்நுட்பம், உயிர் முறைமைகள் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் குறைந்தது இரு பாடங்களில் C சித்தி பெற்றிருக்க வேண்டும்.
13.தகவலும் தொடர்பாடல் தொழில்நுட்பமும் (ICT)
AL இணைந்த கணிதம், பௌதீகவியல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் ஒன்றில் C சித்தி பெற்றிருக்க வேண்டும். வேறு ஏதேனும் இரு பாடங்களில் குறைந்தது C சித்தி பெற்றிருக்க வேண்டும்.
14.நிதிப் பொறியியல் (Financial Engineering)
AL தகைமையுடன் மேலதிகமாக OL ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் குறைந்தது C சித்தி பெற்றிருக்க வேண்டும்.
By Muhuseen Raisudeen
https://admission.ugc.ac.lk/?fbclid=IwAR1tXnGuQbdgesSuAoZPK6TF5822s0NQm7wt4HZlGmSr2kTp8GbG62PQlG4#/