ஜப்பான் பயணிகள் விமானம் மற்றும் கடலோரக் காவல்படை விமானம் மோதியதில் 5 பேர் பலி.
ஜப்பானில் பயணிகள் விமானம் ஷின் சிட்டோஸ் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கடற்படையின் விமானத்தின் மீது மோதியதில் தீப்பற்றி முழுவதுமாக எரிந்து சாம்பலானது.
இதற்கிடையே விமானத்தில் இருந்த 379 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்ட அதேநேரத்தில் கடற்படையின் விமானத்தில் இருந்த 6 பேரில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் எனவும், ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர் என்ற புதிய செய்தி வெளியாகியுள்ளது.
இதை ஜப்பானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் ஒன்று சற்றுமுன் தெரிவித்துள்ளது.
மேலும், ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று 7.6 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஜப்பானில் பலர் உயிரிழந்தனர்.
இதற்கான மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த கடற்படை விமானங்களில் இதுவும் ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதிஷ்டவசமாக பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
அதேநேரம் விமானங்களில் ஒன்று எந்த ஓடுபாதையில் தரையிறங்க வேண்டும் என்பது பற்றிய வழிமுறைகளை தவறாகக் கேட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.