அஸ்ஸாமில் லாரி- பேருந்து மோதி கோர விபத்து: 12 பேர் பலி, 25 பேர் காயம்
அஸ்ஸாம் மாநிலம், கோலாகட் மாவட்டம் பலிஜன் அருகே புதன்கிழமை (ஜன.3) அதிகாலை சுற்றுலாப் பேருந்தும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 12 பேர் பலியாகினர், 25 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோலாகட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேன் சிங் கூறியதாவது:
அஸ்ஸாம் மாநிலம், கோலாகட் மாவட்டத்தில் உள்ள டெர்கான் அருகே உள்ள பாலிஜன் நகருக்கு 45 பேர் கொண்ட ஒரு குழுவினர் கமர்பந்தா பகுதியில் இருந்து சுற்றுலாப் பேருந்தில் சுற்றுலா சென்றனர். பேருந்து திலிங்க மந்திர் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த போது புதன்கிழமை அதிகாலை(ஜன.3) 5 மணியளவில் பலிஜன் அருகே நிலக்கரி ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலாப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்தவர்களில் 10 சம்பவ இடத்திலேயே பலியாகினர், 2 பேருந்து மருத்துவமனையில் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் ஜோர்ஹட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஒடிவந்த அந்த பகுதியில் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருவதாக ராஜேன் சிங் கூறினார்.