வவுனியா பொது வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்குக் கொரோனாவா? – உடல் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு.

வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த நிலையில், அவருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் அவரின் உடல் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
அனுராதபுரம், பதவியா பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான நபர் சிறுநீரக நோய் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி நீமோனியா காய்ச்சலாக மாறி நேற்று இரவு அவர் மரணமடைந்தார்.
அவருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவருடைய உடல் மாதிரிகள் பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.