கோர விபத்தில் தாயும் மகளும் மரணம்!

கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி அவர்கள் பயணித்த வான் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருந்துகஹாதெக்ம பகுதியில் லொறியுடன் வான் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அம்பலாந்தோட்டை பகுதியை சேர்ந்த 57 வயதுடைய பெண்ணும், அவரது 31 வயது மகளுமே இந்த விபத்தில் சாவடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.