முல்லைத்தீவில் சர்வதேச சமாதான தினம் அனுஷ்டிப்பு.
முல்லைத்தீவில் சர்வதேச சமாதான தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
உலக சர்வதேச தினத்தை முன்னிட்டு சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தால் சிலாபத்தை தெற்கு, நீராவிப்பட்டி கிழக்கு, நீராவிப்பட்டி மேற்கு, சித்திராபுரம் ஆகிய நான்கு கிராமங்களை மையப்படுத்தியதாக சர்வதேச சமாதான தினம் இன்று (21) திங்கட்கிழமை சிலாபத்தை தெற்கு பவான் முன்பள்ளி வளாகத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் பணிப்பாளர் மற்றும் அமலமரி தியாகிகள் சபை அருட்பணி ஸ்ரனி சுவாம்பிள்ளை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கரைதுறைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சி.ஷர்மி அவர்களும், சிறப்பு விருந்தினராக சட்டத்தரணி E.A டொமினிக் பிறேமானந் மற்றும் சி.சிவஞானசேகரன்(அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்), கௌரவ விருந்தினர்களாக அருட்பணி A.S ஜாவிஸ் (முதல்வர், முல்லைத்தீவு மறைக்கோட்டம்), வண. முகம்மது அலிபா முஜீப்(மௌலவி, முல்லை மறைக்கோட்டம்), வண. சிவசிறி சிவகந்ததாச குருக்கள் (பிரதம குருக்கள் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமாதானத்திற்காக உரிமை எனும் தொனிப் பொருளில் இடம்பெறும் சர்வதே சமாதான தினம் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வானது மதங்களுக்கிடையிலான நல்லினக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
மேலும் இந் நிகழ்வில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
மதத் தலைவர்கள், கிராம சேவகர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள், தொண்டர் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள், கிராம மக்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டனர்.
தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் வாழும் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களை ஒன்றிணைத்து முரண்பாடற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் நான்கு கிராமங்களை மையப்படுத்தியதாக பெண்கள், சிறுவர்களுக்கான போட்டிகள்(19 சனிக்கிழமை) மற்றும் இளைஞர்களுக்கான துடுப்பாட்டப் போட்டிகள் (20ஞாயிற்றுக்கிழமை) இரு பிரிவுகளாக நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.