யாழில் கிணற்றில் வீழ்ந்து 96 வயது மூதாட்டி பரிதாப மரணம்!

யாழ்ப்பாணத்தில் 96 வயதான மூதாட்டி ஒருவர் கிணற்றில் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
அராலி மேற்கு, வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் தங்கம்மா என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (04) இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மேற்படி மூதாட்டி கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு முயன்ற வேளை கால் தவறி கிணற்றினுள் வீழ்ந்து சாவடைந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.