ஐந்தில் கற்கும் சிங்கள மொழி மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு.

திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தின் தரம் ஐந்தில் கற்கும் சிங்கள மொழி மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு இன்று மதவாச்சி வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாக கலந்து செயலமர்வை ஆரம்பித்து வைத்தார்.பின்தங்கிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொள்ளும் வகையில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இச்செயலமர்வுக்கான வளவாளர்களுக்கான அனுசரனையை கோமரங்கடவெல பிரதேச செயலாளர் எஸ்.எம்.சி.சமரகோன் வழங்கியமை விசேட அம்சமாகும்.

அத்துடன் தரம் ஐந்து மாணவர்களுக்கு ஆளுநரினால் கற்றல் உபகரணங்களும் இதன்போது வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரச அதிகாரிகள் , அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.