அரசு ஊழியர்களுக்கு வழங்குவதாக சொன்ன 10′ 000 தில் 5000 ஜனவரி முதல் …
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசு ஊழியர்களுக்கு வழங்குவதாக சொன்ன 10′ 000 ரூபாவில் , 5’000 ரூபாவை ஜனவரி முதல் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களும் செலுத்தப்பட்டு விட்டதாகவும், அடுத்த நான்கு காலாண்டுகளில் பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.
அத்துடன், இவ்வருட இறுதிக்குள் பொருளாதார வளர்ச்சி வீதம் 3 வீதமாக அதிகரிக்கப்படும் எனவும், 2025 ஆம் ஆண்டில் 5 வீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.