அயோத்தி ராமர் கோயிலுக்காக 450 கிலோ எடையில் டிரம்.., உற்சாகத்தில் பக்தர்கள்
அயோத்தி ராமர் கோயிலில் வைக்கப்படுவதற்காக 450 கிலோ எடையில் டிரம் (Drum) தயாரிக்கப்பட்டுள்ளது.
பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் ஜனவரி 22 -ம் திகதி நடைபெற உள்ளது. அப்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிறுவ உள்ளார்.
மேலும், ராமர் கோயிலின் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்கள் அழைக்கப்பட உள்ளனர். இவர்களை தவிர கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
மாதுரி தீட்சித், அனுபம் கெர், அக்ஷய் குமார் இயக்குனர்கள் ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் லீலா பன்சாலி, ரோஹித் ஷெட்டி, தயாரிப்பாளர் மகாவீர் ஜெயின், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலில் வைக்கப்படுவதற்காக 450 கிலோ எடையில் டிரம் (Drum) தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த டிரம்மானது குஜராத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் வரை தேர் மூலம் டிரம் எடுத்துச் செல்லப்படுகிறது.
குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் அகமதாபாத்தில் கிளம்பிய தேரை இன்று தொடங்கி வைத்தார். இந்த டிரம்மை தயாரித்த சமாஜின் பிரதிநிதி கூறுகையில், “இந்த டிரம்மானது இரும்பு தகடுகளால் செய்யப்பட்டுள்ளது. மேலும், 1000 ஆண்டுகள் வரை இதனை பயன்படுத்தலாம்” என்று கூறியுள்ளார்.